தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக்கு. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு,கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

இவரின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். இவர் கடந்த வருடம் இறுதியில் தான் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம்  பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது திருமணத்தில் மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதை கேலி செய்து வந்தது பற்றி ஓபன் ஆக பேசி இருந்தார்.

தற்போது திருமணத்திற்கு பிறகு நான்கு மாதம் ஆகிய நிலையில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய மஞ்சுமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manjima Mohan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manjimamohan)