தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.அந்த நிகழ்ச்சி இவரது புகழை பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் சென்றது.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.அதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணி தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது கவர்ச்சியான ஆடைஅணிந்து ஆண் நண்பர்களுடன் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Raiza Wilson இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@raizawilson)