தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சின்னத்திரையிலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவருக்கு இந்திரஜா என்ற மகளும் உள்ளார். தனது தந்தையைப் போலவே இவரும் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். விஜயுடன் இணைந்து நடித்த பிகில் திரைப்படம் இவருக்கு சிறப்பான என்ட்ரி ஆக அமைந்தது.

அப்படத்தில் கால் வந்து வீராங்கனையாக பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அப்படத்தில் அவரின்  நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது.இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படத்திலும் அதிதி சங்கரின் தோழியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

இந்நிலையில் ரோபோ சங்கர் குண்டாக இருந்த நிலையில் தற்போது மிக மிக ஒல்லியாக மாறி உள்ளார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை பார்த்து ரசிகர்கள் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆனது என அதிர்ச்சியுடன் கேள்வி கேட்டு புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.