தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். ஒரு திரைப்படத்தின் கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லவர். அப்படி இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தங்கலான் திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே விக்ரம் கடந்த 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களின் மகன் துருவ் விக்ரம் ஒரு நடிகராக உள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் தியாகராஜன் தான் விக்ரமுக்கு தாய் மாமா என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மகன் பிரசாந்த் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர். நெருக்கமான உறவினர்கள் என்றாலும் விக்ரம் மற்றும் தியாகராஜன் குடும்பம் ஒரு பிரச்சனை காரணமாக பேசிக்கொள்வதில்லை.