சென்னையில் பிரபல தியேட்டரை விலைக்கு வாங்கிய நடிகை நயன்தாரா…. என்ன காரணம் தெரியுமா…?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

சென்னையில் பிரபல தியேட்டரை விலைக்கு வாங்கிய நடிகை நயன்தாரா…. என்ன காரணம் தெரியுமா…??

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த வருடம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தங்கள் குழந்தைகளுக்கு  உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் வைத்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் நயன்தாரா தனது கணவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல படங்களை தயாரித்து சம்பாதித்து வருகின்றார். அதனைப் போலவே லிப்பாம் கம்பெனியும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னையில் பிரபல தியேட்டர்களில் ஒன்றாக இருந்துமூடப்பட்ட அகஸ்தியா திரையரங்கை சொந்தமாக நயன்தாரா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயம் அந்த திரையரங்கில் புதிதாக இரண்டு தியேட்டர்களை கட்டவும் அவர் முடிவெடுத்துள்ளாராம். அடுத்த ஆண்டு இந்த தியேட்டர் திறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. வடசென்னையில் நவீன வசதிகளுடன் திரையரங்குகள் இல்லாததால் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இந்த திரையரங்கை பல புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in