திருத்தணி முருகனுக்கு காவடி எடுத்துச் சென்ற நடிகை ரோஜா.. ஒன்று திரண்ட ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருத்தணி முருகனுக்கு காவடி எடுத்துச் சென்ற நடிகை ரோஜா.. ஒன்று திரண்ட ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் இருவரும் படித்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார்.

அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி கொண்டிருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் ரோஜா சமீப காலமாக கோவில்களுக்கு சென்று பல பரிகாரங்கள் செய்யும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதன்படி ரோஜா நேற்று திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Advertisement

அங்கு ரோஜாவை கண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஒன்று திரண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in