தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

இவர் கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் சிறுவயது நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் வாட்ச்மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தில் நிகிதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிறகு பப்பி,மன்மத லீலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியை இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

ஆனால் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கன்னட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அவ்வகையில் ரசிகர்களை மயக்கும்படியாக புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில் அவரின் சில க்யூட்டான புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.