LATEST NEWS
‘குக் வித் கோமாளி’ சிவாங்கியா இது?… உங்களுக்கு நல்லா பாட தெரியும்… நல்லா டான்ஷும் ஆடுவீங்களா?… வைரலாகும் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் சிவாங்கி .இவரது குரல் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் ,பாடல் என்று வந்துவிட்டால் இவர் கில்லியாக பாடிய அசத்தி விடுவார்.
ஆனால் இவரால் இறுதிப் போட்டியை அடைய முடியவில்லை. ஆனால் தற்பொழுதும் ரசிகர்களின் பேவரட் பாடகியாக வலம் வந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 3 சீசன்களிலும் கோமாளியாக கலக்கினார்.
இவர் தற்பொழுது 4வது சீசனில் குக்காக களமிறங்கி அசத்தினார் . சமீபத்தில் இந்நிகழ்ச்சியும் நிறைவடைந்தது. ஆனால் இதற்கு பிறகு அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரப்போவதில்லை என கூறி ரசிகர்களை வருத்தம் அடையவைத்தார். சிவாங்கி சின்னத்திரையில் மட்டுமின்றி தற்பொழுது வெள்ளித் திரையிலும் பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்திலும், வடிவேல் உடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஷிவாங்கி. இவர் தற்பொழுது தான் நடனம் ஆடும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram