LATEST NEWS
பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகிறதா?… ஹேமா வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவை பார்த்து உறுதி செய்த ரசிகர்கள்..!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தினம்தோறும் இந்த சீரியலை பார்க்கும்போது அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது.
தற்போது சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புது வீடு கட்டி உள்ள நிலையில் அதில் குடி ஏறுவது போல காட்சிகள் வருகின்றன. மேலும் அந்த வீட்டிற்கு தனலட்சுமி இல்லம் என்று மூத்த அன்னையின் பெயர் வைத்துள்ளதாக ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. மொத்த குடும்பமும் விரைவில் புது வீட்டுக்கு செல்ல உள்ள நிலையில் அதோடு சீரியல் முடிய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகிறதா? என கேள்விக்குறி மட்டும் வைத்துள்ளார். அதனால் சீரியல் முடிவது உறுதியென ரசிகர்கள் கூறி வருகின்றன. அது மட்டுமல்லாமல் அடுத்து இரண்டாம் பாகம் தொடங்கிடாதீங்க எனவும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க