தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த திரைப்படம் பல விருதுகளையும் வாங்கி குவித்தது.

இந்த திரைப்படத்தில் ஹீரோவின் அக்காவாக ஸ்டேஷனில் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அவர்தான் சுபத்ரா ராபர்ட்.

இவர் இந்தியாவில் பிறந்தாலும் பிரான்ஸ் நாட்டில் வளர்ந்த தமிழ் பெண். கிட்டத்தட்ட 20 வருடங்களாக பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துள்ளார்.

இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார். இவர் ஒரு செவிலியர் ஆகவும் இருந்துள்ளார். இவர் இந்தியாவிற்கு பல சேவைகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்.

20 வருடங்களாக இந்தியாவில் தொலைத்த அனைத்தையும் மீண்டும் மீட்டெடுத்தார். இவர் இந்தியா வந்த பிறகு நான்கு வருடங்கள் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்து உள்ளார்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

குறிப்பாக வெற்றிமாறனின் அசுரன், கர்ணன், வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தனுசுடன் இணைந்து நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்த படங்களை தொடர்ந்து தான் இவருக்கு ஜெய் பீம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்தின் கதையைப் படிக்கும் போது கலங்கிய  சுபத்ரா தன்னுடைய முழு பங்களிப்பையும் தருவதாக கூறியுள்ளார்.

இவர் கணவரின் பெயர் ராபர்ட். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சுபத்ராய் இணையத்திலும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

தினந்தோறும் புதுவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.