நடிகை ஷர்மிளா தன்னுடைய 5 வயதிலிருந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார். இவர் மலையாளத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அதைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் பல திரைப்படங்களில் நடித்திருந்த போதிலும் இவர் சினிமாவில் தற்போது வாய்ப்பில்லாமல் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஷர்மிளா தன் வாழ்வில் நடந்த சில விஷயங்களைப் பற்றி கூறியிருந்தார். அதில் நான் சினிமாவில் வந்த போது கிளாமர் ரோல்களில் நடித்ததால் பாப்புலர் ஆகிவிடலாம் என்று பலரும் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் எனக்கு அந்த மாதிரி நடிப்பதற்கு விருப்பம் கிடையாது. என்னுடைய அப்பா மறைந்த பிறகு சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி தெரியவந்தது. எனது குடும்பத்தினர் நான் சம்பாதிக்கும் பணத்தை என்னிடமே வைத்துக் கொள் என்று கூறிவிடுவார்கள்.

அதற்காக என் பணத்திற்காக ஆசைப்பட்டு பல ஆண்கள் தன்னை காதலிப்பதாக கூறி என்னிடம் மோசமாக நடந்து கொண்டு பணத்தை பறித்து விட்டனர் என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டியில் அவர் கூறிய பல விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.