தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் கடைசியாக ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

from charging 20 25 crores per film to owning a fleet of luxury cars heres how suriya lives his dream life 00001

இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்  திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆனால் வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

surya vetrimaran

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி வெளிவரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படம் உருவாக உள்ளது.

இதில் சூர்யா நடிக்கிறார் என்பதை அனைவரும் அறிவார்கள். இத்திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதன் பிறகு இந்த படம் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை.

collage 1672837768

இதனால் இந்த படத்தை ட்ராப் செய்து விட்டார்கள் என்று பலரும் கூறி வந்தனர் ஆனால் இப்படம் தொடர்பாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர், ‘செய்யாறு பாலு’ சமீபத்திய பேட்டி ஒன்றில் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

d297fd4852fbab39b64b767fa2e095e1

அதாவது வாடிவாசல் திரைப்படத்தில் இருக்கும் காளை மாடு சூர்யாவிடம் பழக மறுத்து வருவதால், இதுவரை ஒப்பந்தமான படங்களை முடித்துவிட்டு அந்த காளை மாட்டுடன் பழகுவதற்காக சில மாதங்கள் எடுத்துக்கொண்டு பிறகு இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சூர்யா தெரிவித்துள்ளதாக பத்திரிக்கையாளர்’ செய்யாறு பாலு’ அந்த பேட்டியில் கூறியுள்ளார்.