LATEST NEWS
மாடர்ன் உடையில் டக்கராக போஸ் கொடுத்த நடிகை வனிதா…. போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார். அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார்.
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அனல் காற்று, அந்தக் கண் மற்றும் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை வனிதா கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மேக்கப் செய்வதிலும் வனிதா ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் நடத்தி வருகின்றார். தற்போது இவர் தனியாக boutique ஒன்றை திறந்து உள்ளார்.
அதனால் முன்பு போல் இல்லாமல் தற்போது வனிதா மிகவும் மார்டனாக மாறிவிட்டார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது மார்டன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
