LATEST NEWS
குடும்பத்துடன் துபாய் சென்ற ஆர்யா – சாயிஷா தம்பதி….. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் குத்து சண்டையை மையப்படுத்திய சார்பட்டா பரம்பரை திரைப்படதில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சாய்ஷா வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அவரைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான உள்ளிட்ட திரைப்படங்களை நடித்தார்.
அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களின் செல்ல மகளுக்கு தூய்மை என்ற பொருள் கொண்ட ஆர்யனா என அழகான பெயரை சூட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆர்யா படங்களில் பிசியாக நடித்து வர மறுபக்கம் சாயிஷா குழந்தையை கவனித்துக் கொள்வதில் முழு கவனம் செலுத்திக்கொண்டு அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியின் மகள் இரண்டு வயதை எட்டியுள்ளார்.
தற்போது இவர்கள் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் சாயிஷா பகிர்ந்து உள்ளார்.
அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.
