LATEST NEWS
“சீக்கிரம் போட்டோ எடுடா தம்பி, எவ்வளவு நேரம் மூச்சை இழுத்து பிடிக்கிறது”.. கணவருடன் அனிதா சம்பத் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்..!!
தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த சினிமா வரை சென்ற பல நடிகைகளில் ஒருவர் தான் அனிதா சம்பத். இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் அது போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேசமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த அனிதா சம்பத் தற்போது திரைப்படங்களில் நடிகையாக கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் அடிக்கடி தனது கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது கணவருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் கேப்சன் ஆக, சீக்கிரம் போட்டோ எடுடா தம்பி, எவ்வளவு நேரம் தான் மூச்ச இழுத்து பிடிக்கிறது என கூறி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
