LATEST NEWS
எளிமையாக நடைபெற்ற பிக்பாஸ் கணேஷ் வெங்கட் மனைவி நிஷாவின் வளைகாப்பு விழா.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் உள்ள பல நட்சத்திரங்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவ்வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
தமிழில் அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.
அதனைத் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இருந்தாலும் இவருக்கென தனி ஒரு புகழை தேடி தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டபிறகு இவரை வெறும் நடிகராக மட்டுமே தெரிந்து கொண்டவர்களுக்கு அவரின் ஒழுக்கம் பற்றி தெரிய வந்தது.
பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டதும் உடலை பேணி காப்பதில் அவர் காட்டி ஆர்வமும் பலரையும் வெகுவாக கவர்ந்தது. இவரின் மனைவி தான் நிஷா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் மறைமுகமானவர்தான் நிஷா. அதன் பிறகு பல டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவன் வேற மாதிரி மற்றும் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து தனக்கு கதாபாத்திரம் சரியில்லை என்று இவர் விலகினார்.
அப்போதுதான் இவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கணேசுக்கும் நிஷாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
இருவரும் முதலில் காதலித்து வந்த நிலையில் காதலுக்கு இவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க இவர்களின் காதலும் திருமணத்தில் முடிந்தது.
இவர்களுக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு சமைரா என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த பெயருக்கு கடவுளின் அருள், அழகின் தெய்வம் மற்றும் கடவுளின் தேர்வு ஒன்று என்று அர்த்தம்.
இதனைத் தொடர்ந்து தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை நிஷா சமீபத்தில் வெளியிட்டார்.
இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் நேற்று நிஷாவுக்கு வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.