LATEST NEWS
இந்த வயசுல இப்படியா?.. கணவருடன் ஜாலியாக கோவா ட்ரிப் சென்ற 90ஸ் நடிகை உமா… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் உமா பத்மநாபன். சென்னையை சேர்ந்த இவர் SIET கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு மீடியா மீதான ஆர்வத்தில் சன் டிவியில் ஜாப் அப்ளை செய்த இவருக்கு செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து பல வருடங்களாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர் 90களில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்களையும் இவர் நேர்காணல் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை ஆயிரம் எபிசோடுகளுக்கு இவரே காம் பெயரிங் பணியுள்ளார். அதன் மூலமாக மிகவும் பிரபலமடைந்தார்.
அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு ராஜ் தொலைக்காட்சியில் ஒரு குடும்பம் ஒரு ரகசியம், ஜெயா டிவியில் வீட்டுக்கு வீடு லூட்டி என்ற காமெடி நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார்.
திரைப்படங்களில் டிவியில் விவாதிப்பது போல காட்சி வந்தாலே இவர்தான் பெரும்பாலும் நடித்திருப்பார். இவர் முதல் முதலில் 1998 ஆம் ஆண்டு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
அதனைத் தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நேர்காணல் செய்யும் கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்த நிலையில் ஏ நீ ரொம்ப அழகா இருக்க, உன்னாலே உன்னாலே, சிவாஜி, விண்ணைத்தாண்டி வருவாயா , உத்தமபுத்திரன் மற்றும் நண்பன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் அம்மா கதாபாத்திரத்தில் எமோஷனலாக நடித்திருப்பார்.
இப்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 40 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதன் பிறகு விஜய் டிவியில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கல்யாண என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நடிகையாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தற்போது பல சீரியல்களிலும் இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை என பன்முகத் திறமைகளை கொண்ட இவர் 25 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வருகின்றார். மேலும் ஏராளமான குறும்படங்கள் ஆல்பம் சாங்கிலும் இவர் நடித்துள்ளார்.
குறிப்பாக இவருக்கு நகைச்சுவை சார்ந்த நடிப்புகளை அதிகம் வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் படங்கள் நடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இவர் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு சரண்யா என்ற ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது கணவருடன் விடுமுறையை கொண்டாட கோவா சென்று இருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
