LATEST NEWS
ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆனது… பிரம்மாண்டமாக திருமணத்தை முடித்த பிரிட்டோ – சந்தியா ஜோடி.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
பொதுவாகவே சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியல் நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா என பல ஜோடிகள் இதுவரை திருமணம் முடித்துள்ளனர்.
அதன்படி தற்போது புதிதாக இந்த வரிசையில் இணைந்திருப்பவர்கள் தான் பிரிட்டோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் ஜோடி.
இதில் பிரிட்டோ சமீபத்தில் விஜய் டிவியில் முடிவடைந்த ராஜா ராணி சீசன் 2 சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதேசமயம் பல சீரியல்களிலும் பிஸியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தவமாய் தவமிருந்து சீரியலில் பிரிட்டோ பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.அதனைப் போலவே சந்தியா ராமச்சந்திரனும் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த சீரியலில் இவர்களின் ஜோடி பார்ப்பதற்கு உண்மையாகவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இருவரும் பாப்புலர் ஆகினர்.
இந்த சீரியலில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் பின்னர் காதல் ஜோடிகளாக வளம் வந்தனர்.
இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் சம்பந்தத்துடன் இருவருக்கும் கடந்த ஜனவரி 25ஆம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இவர்களை திருமண நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினார்.
இந்நிலையில் பிரிட்டோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் தம்பதிக்கு நேற்று மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் திருமணத்தில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். அது தொடர்பான அழகிய புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்
