VIDEOS
ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய குக் வித் கோமாளி செஃப் தாமு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பிரபல செஃப்களான செஃப் தாமு மற்றும் வெங்கடேஸ் பட் ஆகியோர் வழிநடத்தினர்.இவர்கள் அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருப்பது மட்டுமல்லாமல் கோமாளிகளுடன் களத்தில் இறங்கி காமெடியை பட்டை கிளப்புவர். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் செஃப் தாமு பல சமையல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இவரின் சமையல்கள் அனைத்துமே அடி தூளாக இருக்கும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. இவர் தனது அத்தை மகளான உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரேணுகா மற்றும் அக்ஷயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே பாடலுக்கு கியூட்டாக நடனமாடிய வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
