LATEST NEWS
47 பந்துகளில் 103 ரன்கள்..! ஸ்டேடியமே அதிர்ந்த ‘நோ-லுக்’ சிக்ஸர்… தி ஹண்ட்ரட் தொடரில் தேவால்ட் ப்ரூவாரியின் ருத்ரதாண்டவம்…!!
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தி ஹண்ட்ரட் லீக் போட்டியில், பர்மிங்காம் ஃபீனிக்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி, லண்டன் ஸ்பிரிட் அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கடினமான இந்த இலக்கை நோக்கிப் களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட் அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களமிறங்கிய தேவால்ட் ப்ரூவாரி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு புத்துயிர் அளித்தார். லண்டன் ஸ்பிரிட் அணியின் கேப்டன் லியாம் லிவிங்ஸ்டனுடன் ஜோடி சேர்ந்த அவர், பர்மிங்காம் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இந்த இணை அதிரடியாக விளையாடி வெறும் 47 பந்துகளில் 103 ரன்கள் குவித்தது. இதில் லிவிங்ஸ்டன் 30 பந்துகளில் 66 ரன்கள் விளாசி அணிக்கு பலம் சேர்த்தார்.
குறிப்பாக, ரஹான் அகமது வீசிய ஓவரில் ப்ரூவாரி வீசிய ‘நோ-லுக்’ (No-look) சிக்சர் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. பந்தை லாங்-ஆன் திசையில் விளாசிய அவர், பந்து எல்லையைத் தாண்டுவதற்கு முன்பே பெவிலியன் பக்கம் முகத்தைத் திருப்பி மாஸாக போஸ் கொடுத்தார். அந்த ராட்சத சிக்சர் பெவிலியனின் மேல் தளத்தில் சென்று விழுந்தது. இறுதியாக, ரஹான் அகமதுவின் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விளாசிய ப்ரூவாரி, ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 18 பந்துகள் மீதமிருந்தநிலையிலேயே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணியை அபார வெற்றி பெறச் செய்தார்.
