“ஏய் நான் சரியா பேசுறேனா?” சங்கிலி முருகன் ரேஞ்சுக்கு தவெக அமைச்சரை வச்சுச் செய்த ஸ்டாலின்… அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏய் நான் சரியா பேசுறேனா?” சங்கிலி முருகன் ரேஞ்சுக்கு தவெக அமைச்சரை வச்சுச் செய்த ஸ்டாலின்… அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?

Published

on

“வெங்கட்ராமன் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு?” என்ற கேள்வியுடன், தவெக அரசின் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளைச் சுட்டிக்காட்டி திமுக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காட்டமான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறுவதையே அமைச்சரின் இந்த முரண்பட்ட கருத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக திமுக சாடியுள்ளது.

அக்டோபர் 10-ஆம் தேதி “அரிசி, சர்க்கரை விலை ஏறவே இல்லை” என்று கூறிய அமைச்சர், அடுத்த இரண்டு நாட்களிலேயே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதை திமுக சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், நகர்ப்புற மக்கள் அந்தஸ்துக்காக சன்னரக பொன்னி அரிசி சாப்பிடுவதால்தான் விலை உயர்ந்துள்ளது எனக் கூறி, கிராமப்புற மக்களை அவர் அவமானப்படுத்தியுள்ளதாகவும், அரிசி வரத்துக் குறைவுதான் காரணம் என நிர்வாகக் குளறுபடிகளை மறைக்கப் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement

ரேஷன் அரிசி குறித்துச் சட்டமன்றத்தில் ஒரு கதையையும், தற்போது தான் ரேஷன் அரிசி சாப்பிட்டு வளர்ந்ததாக வேறொரு கதையையும் அமைச்சர் வெங்கட்ராமன் பேசி வருவதாக திமுக விமர்சித்துள்ளது. அரசியல் கட்சியினர் அரிசியைப் பதுக்குவதுதான் செயற்கை விலை உயர்வுக்குக் காரணம் என்று அபாண்டமாகப் பழிபோடுவதை விடுத்து, முறையான நிர்வாகத் திறனுடன் செயல்பட வேண்டும் என்றும், விவசாயத்தைச் சீரழித்ததே தற்போதைய தட்டுப்பாட்டிற்கு அடிப்படை காரணம் என்றும் சாடியுள்ளது.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, திரைப்பட நடிகர் சங்கிலி முருகனின் “ஏய்.. நான் சரியா பேசுறேனா?” என்ற நகைச்சுவை டயலாக்கிற்கு அமைச்சர் டஃப் கொடுத்து வருவதாக திமுக நக்கல் செய்துள்ளது. மக்கள் விலைவாசி உயர்வால் பெரும் கொந்தளிப்பில் இருக்கும் இந்த வேளையில், தவெக அரசு பல்லிளித்துப் பழிபோடுவதை நிறுத்திவிட்டு, மக்களின் நியாயமான குரல்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று திமுக தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in