ஐயோ என்னாச்சு..? முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி மருத்துவமனையில் ICU வில் அனுமதி.. காலையிலேயே அதிர்ச்சி செய்தி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ என்னாச்சு..? முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி மருத்துவமனையில் ICU வில் அனுமதி.. காலையிலேயே அதிர்ச்சி செய்தி..!!

Published

on

பாஜக மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி (98), திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் (நெஞ்சு) தொற்று பாதிப்பு காரணமாக, நேற்று மாலை சுமார் 7:30 மணியளவில் அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிறப்பு மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அத்வானிக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராகவும் திருப்திகரமாகவும் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வயோதிகம் காரணமாக அவர் இந்த ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in