தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இவர் எப்போதுமே தனது படத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புவார்.

அஜித்துடன் நடித்த நடிகைகள் பலரும் முன்னணி நடிகைகளாக தற்போது திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அஜித்துடன் ஒரு திரைப்பட நடித்த பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகை தான் நடிகை மானு. இவர் காதல் மன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக தன்னுடைய 16 வயதில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற இவருக்கு நல்ல கெரியரை ஏற்படுத்தி தந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு 16 வருடம் கழித்து என்ன சத்தம் இந்த நேரம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

தற்போது இவர் திருமணம் ஆகி சிங்கப்பூரில் செட்டில் ஆகியுள்ள நிலையில் நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தற்போது இவர் தனது கணவர் மற்றும் குழந்தை உடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.