LATEST NEWS
தமிழ் சினிமா படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்களுக்கு பிடித்த தாய்மார்கள் யார் யார் தெரியுமா?..
அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அப்படி சினிமாக்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற அம்மாக்களைப் பற்றி இதில் காண்போம்.
1.ரம்யா கிருஷ்ணன்:
‘பாகுபலி’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த ராஜமாதா கதாபாத்திரமானது யாராலும் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இதில் இவர் பாகுபலி – பல்வாள் தேவன் அம்மாவாக நடித்திருப்பார்.இப்படத்தின் மூலம் மக்கள்மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.
2.சரண்யா:
இவர் முதலில் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார் நடிகை சரண்யா . அதன் பின்னர் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இவர் நடிகர்களுக்கு மற்றும் நடிகைகளுக்கும் அம்மாவாக நடித்து மக்கள் மனத்தியில் நல்லவரவேற்பு பெற்றார்.
3.நதியா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஒற்றை தாயாக நடித்து பலரது விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றார். இவர் தற்போது சமீபத்தில் ஹீரோக்களுக்கு தாயாக மாறி நடித்து வருகிறார்.
4.ராதிகா:
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் சூரியவம்சம் படத்தில் அம்மாவாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார் .இதை தொடர்ந்து தங்க மகன், தெறி, நானும் ரவுடிதான் ஆகிய படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
5.லட்சுமி:
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை லட்சுமி இவர் பல குணச்சித்திர வேதங்களில் நடித்துள்ளார். நடிகைகளுக்கு சிலருக்கு பாட்டி வேடங்களில் கூட நடித்திருக்கிறார். இவர் படையப்பாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அம்மாவாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளை பெற்றார்.
6. ஊர்வசி:
தமிழ் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. இவர் நகைச்சுவை உணர்வுக்கு பெயர் போனவர். இவர் சிவா மனசுல சக்தி ,தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போன்ற படங்களில் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து அனைத்து அம்மா மார்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
7.கலைராணி:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கலைராணி இவர் இவரது உடல் மொழியும் ஸ்லாங்கும் அன்றாட வாழ்க்கையில் தொடர்பு படுத்தக் கூடியது. இவர் டும் டும் டும் ,முதல்வன், எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
8.லட்சுமி ராமகிருஷ்ணன்:
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் ஒரு சில படங்களின் மட்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாஸ் என்கிற பாஸ்கரன், நாடோடிகள், யுத்தம் செய் போன்ற படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.
9. கீதா:
1978 இல் கதாநாயக திரையுலகில் நுழைந்தவர் நடிகை கீதா. அதன் பிறகு இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சந்தோஷ் சுப்பிரமணியம், அழகிய தமிழ் மகன், உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் அம்மாவாக நடித்து தாய்மார்களின் கவனத்தை ஈர்த்தார்.
