LATEST NEWS
எதிர் நீச்சலில் திடீரென என்ட்ரி கொடுக்கும் புது ஆதி குணசேகரன்?.. ஒருவேளை இவரா இருக்குமோ?.. செம கடுப்பான ரசிகர்கள்..!!
எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் மாரிமுத்து. இந்த சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற இவர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போவது என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அவர் இடத்தில் யாரையும் வைத்து எங்களால் நிச்சயம் பார்க்க முடியாது என்று ரசிகர்கள் கருத்தாக தெரிவித்தனர். இதனால் எதிர் நீச்சல் கதைக்களம் அப்படியே மாத தொடங்கி விட்டது.
ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அண்ணன் ஒருவர் இருப்பதாகவும் அவர் யார் என்பதை அறிமுகப்படுத்தி கதையின் போக்கு அவரை நோக்கி சில நாட்கள் நகர உள்ளதாகவும் தகவல் வெளியானது. முந்தைய நாள் க்லோசப் சாட்டில் ஒருவர் நடந்து வருவது போல காட்டப்பட்ட நிலையில் புது ஆள் குணசேகரன் வந்துவிட்டார் அவர் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் நேற்று எபிசோடில் அப்படி யாரையும் காட்டாமல் அவர் செருப்பை விட்டு விட்டு சென்றது போன்றும் விரைவில் வருவார் என்றும் காட்டப்பட்டது. எனவே தற்போதைக்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு யாரும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வேலராம மூர்த்தி படத்தில் பிசியாக இருப்பதால் பசுபதி, அழகம்பெருமாள் மற்றும் இளவரசு இவர்களில் ஒருவரை ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.