LATEST NEWS
திருமணத்திற்கு முன்பு தயாரிப்பாளருடன் உறவில் இருந்தாரா நடிகை சினேகா?.. பரபரப்பை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழில் என்னவளே என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி திரைப்படங்களிலும் அதிக அளவு நடித்து வந்த இவர் புன்னகை அரசி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அதன் பிறகு பிரசன்னாவுடன் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த சினேகா அவரின் காதல் வலையில் சிக்கிய நிலையில் இருவரும் காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நடிகை சினேகா பிரசன்னாவை திருமணம் செய்வதற்கு முன்பு அவரது முதல் காதல் தோல்வியில் முடிந்ததாக பயில்வான் ரங்கநாதன் தற்போது பல வருட உண்மையை கூறியுள்ளார். அதாவது பிரசன்னாவை காதலிக்கும் முன்பு நடிகை சினேகா நாக் ரவி என்ற தயாரிப்பாளரை உருகி உருகி காதளித்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்களது காதல் மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் வரை சென்ற நிலையில் காதலரின் மீது சந்தேகப்பட்ட சினேகா அவர் தனக்கு உண்மையாக இல்லை என்பதை தெரிந்து கொண்டு பிரிந்து விட்டார். இதனால் இவர்களது திருமணம் நிச்சயதோடு நின்று போன நிலையில் பிறகு ஒரு கட்டத்தில் பிரசன்னாவை காதலித்த சினேகா திருமணம் செய்து கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.