தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை பாவனா. இவர் நடிப்பை தாண்டி சிரிப்பிற்கு மயங்காதா ஆளே கிடையாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார். இவர் முதல் முதலாக தமிழ் திரை உலகில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெயில் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்தே தீபாவளி மற்றும் ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தார். அது மட்டுமல்லாமல் இரண்டு முறை கேரள மாநில திரைப்பட விருதினை பெற்றுள்ளார்.

இவ்வாறு படங்களில் பிசியாக இருந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட திரைப்பட தயாரிப்பாளரான நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது சுடிதாரில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Bhavana🧚🏻‍♀️Mrs.June6 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bhavzmenon)