தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு ராஜதந்திரம் மற்றும் மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் பிரபலமான நடிகை தான்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய கேள்விக்கு 2020 ஆம் ஆண்டு என்னுடைய காதல் முறிந்தது, அதிலிருந்து வெளியேற சிறிது நாட்கள் ஆனது, தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை, என்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை என தெரிவித்திருந்தார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.