தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது விஜய்யுடன் தளபதி 67 திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அறிவிப்பாக வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தங்கை இவர்தான் என்று கூறி ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பெண்ணின் பெயர் அவந்திகா கனகராஜ் என்பதாலும், தளபதி 67 படத்தின் லோகேஷ் கனகராஜ் பதிவிற்கு ரீ டுவிட்செய்ததாலும் ரசிகர்கள் அனைவரும் அவரை லோகேஷ் கனகராஜின் தங்கை என்று புரிந்து கொண்டனர். ஆனால் அந்தப் பெண் அவரின் தங்கை இல்லை எனவும் அவர் தி ரூட் என்னும் நிறுவனத்தின் டேலண்ட் மேனேஜராக பணியாற்றி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.