தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி பாடகர்களாக வளம் வந்தவர்கள் பலரும் உள்ளனர். அதில் சிலரின் பாடல்கள் மக்கள் மனதில் இன்றும் மறவாத இடம் பிடித்துள்ளன. அப்படி ரசிகர்களால் ரசிக்கப்படும் பாடல்களை பாடியவர்களில் ஒருவர்தான் பாடகர் ஹரிஹரன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிக பாடல்களை பாடியுள்ளார். இவர் மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி என பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தமிழிலும் 500க்கும் மேற்பட்ட பாடல்களையும் 200க்கும் மேற்பட்ட இந்தி பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் பாடல்கள் இன்றும் மக்களின் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதனிடையே இவர் லலிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு அக்ஷய் மற்றும் கரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.