காலையிலேயே ஷாக்..! ரூ.100 கோடி மோசடி.. திமுக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டாஸ்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காலையிலேயே ஷாக்..! ரூ.100 கோடி மோசடி.. திமுக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!

Published

on

திமுக செய்தித் தொடர்புக் குழுவின் துணைத் தலைவர் அரசகுமார், தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, போலி அமைப்பு ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த அமைப்பின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் ₹100 கோடிக்கும் மேல் முறைகேடாகப் பண மோசடி செய்ததாக அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்துள்ளன.

இந்த மோசடிப் புகார்களின் அடிப்படையில் சென்னை காவல்துறை அரசகுமாரை அதிரடியாகக் கைது செய்தது. தொடர்ந்து அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், கடுமையான குண்டர் தடுப்புச் சட்டத்தின் (Goondas Act) கீழ் தற்போது சட்டப்பூர்வ நடவடிக்கை பாய்ந்துள்ளது

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in