லெஜெண்ட் சரவணனுக்கு ஆளுநர் தமிழிசை இப்படி ஒரு உறவு முறையா?.. அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

லெஜெண்ட் சரவணனுக்கு ஆளுநர் தமிழிசை இப்படி ஒரு உறவு முறையா?.. அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!!

Published

on

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சரவணன் அருள்.தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார். தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா மற்றும் தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளை வைத்து அவர்களுடன் இணைந்து நடித்த விளம்பரம் எடுத்தார். அதனால் பலரும் இவரை கேலி செய்து வந்தனர். அதற்கெல்லாம் செவி சாய்க்காத சரவணன் அடுத்த கட்டமாக படங்களின் நடிக்கும் ஆசையை நிறைவேற்றினார். அதன்படி தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவுக்கு வசூல் ஈட்டியது. இந்நிலையில் தற்போது சரவணன் அருள் தனது இரண்டாவது படத்திற்காக தயாராகி வருகிறார். அந்தப் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்த முடிவெடுத்து சரவணன் அதற்காக கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஹீரோ கதையில் சரவணன் அருள் அடுத்ததாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரின் மனைவி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மிக நெருங்கிய சொந்தம். அதாவது தமிழிசையின் தாயார் சரவணன் மனைவிக்கு சின்னம்மாள் உறவு முறையாகும். அதாவது தமிழிசைக்கு சரவணன் மனைவி அக்கா மகள். எனவே இதை வைத்து பார்த்தால் தமிழிசை சௌந்தர்ராஜன் சரவணன் அருளுக்கு மாமியார் உறவு முறை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in