திரைப்படத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்கி சினிமாவில் நுழைந்தவர் தான் இயக்குனர் பா. ரஞ்சித். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா,சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திர நகர்கிறது உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மாபெரும் சாதனை படைத்தார்.

தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சில ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இவரின் படங்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு பல புகழுக்குரிய இவர் அனிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் பா ரஞ்சித் அந்த குடும்பத்துடன் ஒரு விழாவிற்கு வந்திருந்த போது நடிகர் கமலுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.