தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தின் இரண்டாம் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. லியோ திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ் போன்ற பல பிரபலங்களும் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் லியோ திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் அபிராமி நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அவர் லோகேஷ் கனகராஜ் உடன் காஷ்மீரில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Abhirami Venkatachalam 🦋 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@abhirami.venkatachalam)