தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் தமன்னா, மோகன்லால் மற்றும் சுனில் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் என்ற திரைப்படத்தின் ரஜினி நடிக்க உள்ளார். 3, வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து லால் சலாம் திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் இந்த படத்தில் விஷ்ணு மற்றும் விக்ராந்த் முன்னணி நடிகர்களாக நடிக்க அதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினியும் நடிக்கிறார்.

இதில் ரஜினி முஸ்லிமாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இறுதியாக பாஷா திரைப்படத்தில் அவர் முஸ்லிமாக நடித்த நிலையில் தற்போது 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அது போன்ற ஒரு வேடத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்திற்காக ஏழு நாட்கள் கால்ஷுட் கொடுத்துள்ள ரஜினிக்கு 25 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.