LATEST NEWS
சட்டை போடாமல் வாயில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்த நடிகர் ரஜினி…. பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் ரஜினிகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மங்களூரில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
அங்கு முகாமிட்டு ரஜினி பல்வேறு காட்சிகளில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கம் லால் சலாம் என்ற திரைப்படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்திற்குப் பிறகு லைக்கா தயாரிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் பழைய அரிய புகைப்படங்கள் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழக்கம். அவ்வகையில் சட்டை எதுவும் அணியாமல் வாயில் சிகரெட் உடன் போஸ் கொடுத்த ரஜினியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.