தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை செய்து வந்த இவர் பாக்கியராஜ் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய இவர் படிப்படியாக சினிமாவின் உச்சத்தை தொட்டார். ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் வில்லனாகவும் பல்வேறு படங்களில் அசத்தியுள்ளார்.

தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.

இவருக்கு வயது தற்போது 54. இந்நிலையில் எஸ் ஜே சூர்யா வின் குடும்பத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஒருமுறை அவர் விருது வாங்கும் விழாவிற்கு தனது அக்காவுடன் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.