விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குடும்பம்,காதல் மற்றும் நட்பு என அனைத்தையும் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் இதனை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அப்படி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் சன் டிவியை முந்தி அடித்துள்ளன. விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமாக சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இளைஞர்களை கவரும் சீரியல்கள் மற்றும் வீட்டு பெண்கள் பார்ப்பது போல கதை உள்ள சீரியல்கள் என அனைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம் உள்ளிட்ட பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்.இவ்வாறு இருக்கையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாம். இதனைக் கேட்ட ரசிகர்கள் நன்றாக தானே ஓடிக்கொண்டிருக்கிறது ஏன் முடிவுக்கு கொண்டு வரீங்க எனக் கூறி அதிர்ச்சி அடைந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tamil Serials இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamilserialexpress)