தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சந்தானம். எப்பொழுதும் திரைப்படங்களில் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் சந்தானம் சில வருடங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.  இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக இவரின் நடிப்பில் கிக் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் மட்டுமல்லாமல் இன்னும் சில திரைப்படங்களையும் சந்தானம் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதாவது புதிதாக கமிட் ஆகும் படங்களுக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகின்றார். அதுவும் சிங்கிள் பேமெண்டாக மட்டுமே அவர் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.