தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே தொழில்நுட்ப நுண்ணறிவு, பிரம்மாண்டம் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு கொண்ட படங்களாகவே அமைந்துள்ளன.
இவர் முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன.
இதுவரை 13 திரைப்படங்களை சங்கர் இயக்கியுள்ளார்.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்து மக்களை வெகுவாக கவர்ந்தவர்.
இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவரின் மகள் அதிதி சங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் முதல்முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார்.
.முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே சங்கர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஐஸ்வர்யா, அதிதி என்ற இரண்டு மகள்களும் அர்ஜித் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது சங்கரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வருகிறது.