#image_title

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய்பல்லவி.

கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி.

என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள்.

அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவரரின் நடிப்பில் அண்மையில் வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சாய்பல்லவி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இவரைத் தொடர்ந்து சாய் பல்லவியின் தங்கை பூஜாவும் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சாய்பல்லவியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

84b89ddd868c791a70940fcd9564d160
323738642 217044740759592 1176065492522857264 n
Sai Pallavi 1
saipplavi 1623733267
screenshot9210 1623733122
1627990007 sai pallavi
IMG 20210619 155139 1200x715