தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இளையராஜா. இவரின் இசைக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் பல பாடல்களும் இன்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் இதுவரை ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்கள் அனைவருடனும் இவர் பணியாற்றியுள்ளார்.

இதனிடையே இளையராஜாவிற்கு ஜீவா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு கார்த்தி ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இளையராஜாவின் மனைவி கடந்த 2011 ஆம் ஆண்டு காலமானார். இளையராஜா தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.