#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வாதி மற்றும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இருந்தாலும் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்காக விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கத்திலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஜிம் ஒர்க் அவுட் வீடியோ புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

அவ்வகையில் தற்போது நடிகர் பிரபுதேவா உடன் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்டுள்ளார். அதில் பிரபுதேவா அண்ணா ரப்பர் மனிதர் என்று குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aishwaryaa Rajinikanth இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aishwaryarajini)