தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஃபிலிம் பேர் விருதுகள் மற்றும் மாநில விருதுகள் என்று பல நூறு விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் நடிகை ராதிகாவின் இளம் வயதில் எடுத்த ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் வெளிநாட்டு பெண் போன்ற லுக்கில் எடுத்த இதுவரை பலரும் பார்க்காத புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.