விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குடும்பம்,காதல் மற்றும் நட்பு என அனைத்தையும் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் இதனை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அப்படி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் சன் டிவியை முந்தி அடித்துள்ளன. விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமாக சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இளைஞர்களை கவரும் சீரியல்கள் மற்றும் வீட்டு பெண்கள் பார்ப்பது போல கதை உள்ள சீரியல்கள் என அனைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பழைய தொடர்கள் முடிவுக்கு வர புத்தம் புதிய தொடர் வரவுள்ளது.பொன்னி மற்றும் ஆஹா கல்யாணம் போன்ற புதிய தொடர்களின் ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இந்த புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் பழைய தொடர்களின் நேரங்கள் வருகின்ற மார்ச் 20 ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2, ஆஹா கல்யாணம் தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தமிழும் சரஸ்வதியும் சீரியல் மாலை 6 மணிக்கு, ராஜா ராணி 2 சீரியல் மாலை 6.30 மணிக்கு, ஆஹா கல்யாணம் சீரியல் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tamil Serials இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamilserialexpress)