குலதெய்வம் கோயிலுக்கு குடும்பமாக திடீர் விசிட் அடித்த இந்திரஜா ஷங்கர்… இதுதான் காரணமா?… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… - Cinefeeds
Connect with us

CINEMA

குலதெய்வம் கோயிலுக்கு குடும்பமாக திடீர் விசிட் அடித்த இந்திரஜா ஷங்கர்… இதுதான் காரணமா?… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது திரையுலகில் நடிகையாக கால் பதித்து கலக்கி வருகிறார்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இத்திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடிகை இந்திரஜா நடித்து கலக்கினார்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை இந்திரஜா.

இவர்  அவ்வப்பொழுது தற்பொழுது தங்களது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது குலதெய்வம் கோயிலுக்கு தனது அம்மா அப்பா மற்றும் காதலனுடன் இணைந்து சென்றுள்ளார்.

விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது .இந்நிலையில் இவர்களின் குலதெய்வ கோயில் விசிட் ஒருவேளை இதற்காக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.