தமிழ் சின்னத்திரையில் 90களில் ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல் தான் சின்ன பாப்பா பெரிய பாப்பா. இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் நளினி, நிரோஷா, விஜே சித்ரா, மதுமிதா மற்றும் எம் எஸ் பாஸ்கர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

ராதிகாவின் ரடான் நிறுவனம் தயாரிப்பில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் சனிக்கிழமை தோறும் இரவு 10.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த சீரியலில் இருக்கும் நகைச்சுவையும் தாண்டி இந்த சீரியலின் பாட்டுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சின்ன பாப்பா பெரிய பாப்பா பாடலை பாடியது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் என ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் சீசன் 2 மற்றும் சீசன் 3 2 மே விஜய் ஆண்டனி தான் இசையமைத்துள்ளார். அந்த வீடியோ பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.