தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

ஓபெலி என்.கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். கௌதம் மேனன் மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் வருகின்ற மார்ச் 30-ம் தேதி படம் வெளியாகிறது.

இந்த நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிம்பு பல உருக்கமான தகவல்களை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவின் அன்சீன் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும். அதன்படி தற்போது நடிகர் சிம்புவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.