ப்பா.. என்னமா ஆடுறாங்க..! பாப் பாடகியுடன் குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ப்பா.. என்னமா ஆடுறாங்க..! பாப் பாடகியுடன் குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரன் மெர்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டுக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்கு முந்தைய சடங்குகள், கொண்டாட்டங்கள் மார்ச் 1 நேற்று முதல் 3-ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெறுகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஆங்கில பாப் பாடகி ரிஹானா நேற்று தொடங்கிய நிகழ்ச்சியில் பாடல் பாடியுள்ளார்.

Advertisement

ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாப் பாடகி ரிஹானா  74 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் கலை கட்டியது.

அப்போது பாப் பாடகி ரிஹானா உடன் இணைந்து பாலிவுட் முன்னணி நடிகை ஜான்வி கபூர் கிளாமராக டான்ஸ் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த வீடியோவை ஜானகி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in