CINEMA
ஒரே நாளில் மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்த ஜவான்… எந்த மொழியில் தெரியுமா?.. செம குஷியில் அட்லீ..!!

பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜவான் திரைப்படம் மூன்று நாட்களுக்கு முன்பு வெளியானது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. கடந்த ஜனவரி மாதம் சாருக்கான் நடிப்பில் வெளியான படம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 1200 கோடி வசூல் செய்தது. அதனால் ஜவான் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. பின்னர் முதல் நாளில் 100 கோடி பாக்ஸ் ஆபீஸில் இணைந்த ஜவான் மொத்தம் 130 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளில் 110 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டே நாட்களில் 240 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது. ஜவான் திரைப்படம் மூன்று நாளில் 350 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 350 கோடி வரை வசூலித்துள்ள ஜவான் பாலிவுட் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் புதிய சாதனை படைத்துள்ளது. அதனைப் போலவே இந்தி வர்ஷனில் மட்டுமே ஒரே நாளில் 70 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் ஜவான் தான் எனவும் கூறப்படுகிறது. இதனை அட்லி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க